ஓசூரில் மேற்கு மண்டல ஐ.ஜி., டிஐஜி ஆய்வு

 

ஓசூர், செப்.10: ஓசூரில் வருகிற 15ம் தேதி, விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வட மாநிலங்களுக்கு இணையாக விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு வருடமும் நடைபெற்ற வருகிறது. இதனையொட்டி 350க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகின்றன. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைகள் பகுதி, பகுதியாக கரைக்கப்பட்டு வரும் நிலையில் இறுதி கட்டமாக, வருகிற 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிறிய, பெரிய 350க்கும் மேற்பட்ட பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலை களில் கரைக்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு, நேற்று ஓசூரில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி உமா, எஸ்பி தங்கதுரை ஆகியோர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் நேதாஜி ரோடு, தாலுகா அலுவலக சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்பட உள்ள ராமநாயக்கன் ஏரி, தர்கா ஏரி ஆகிய நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎஸ்பி சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

The post ஓசூரில் மேற்கு மண்டல ஐ.ஜி., டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: