சீன எல்லை விவகாரம் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ்

தவுசா: நாடாளுமன்றத்தில் சீன எல்லை விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அல்ல, பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ராஜஸ்தானில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திராவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:   பாஜ 1962ம் ஆண்டு போர் குறித்து கேள்வி எழுப்புகிறது. இந்தியா, சீனா இடையே 1967ல் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதுவும் வரலாற்றின் ஒருபகுதி என்பதை பாஜ மறந்து விட்டது. இதற்கு முன்பிருந்த பிரதமர்கள் நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளனர். விவாதங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் முதல் பிரதமர் மோடிதான். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தவே பயப்படுகிறார்.  நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். சீன எல்லை பிரச்னை குறித்து விளக்கம் தர வேண்டியது பாதுகாப்பு அல்லது வெளியுறவு அமைச்சர்கள் அல்ல; பிரதமர் விவாதிக்க வேண்டும்; விளக்கம் அளிக்க வேண்டும். சீனா உடன் 1986ம் ஆண்டில் நடந்த சம்தோராங் சூ மோதலின் போது, யாங்ட்சே பகுதியில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி படைகளை குவித்து சீனாவை அடக்கினார். இவ்வாறு அவர் பேசினார்….

The post சீன எல்லை விவகாரம் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: