சாணார்பட்டி பகுதியில் செண்டு மல்லி பூ விளைச்சல் சூப்பர்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோபால்பட்டி: தமிழகம் முழுவதும் கொரோனா தடை முற்றிலும் விலக்கப்பட்ட நிலையில் கிராமப்புற கோயில்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா காலங்களில் அதிகளவு பயன்படுத்தப்படும் செண்டு மல்லி பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மடூர், புகையிலைப்பட்டி, ராஜக்காபட்டி, தவசிமடை, கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செண்டு மல்லி சாகுபடி ெசய்யப்பட்டுள்ளது. 90 நாட்கள் பலன் தரும் இப்பூக்களின் தேவை அதிகரிப்பால் இதன் விலை உயர துவங்கி உள்ளது. கடந்த காலங்களில் செண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 என விற்று வந்த நிலையில் தற்போது தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து நத்தம் பூக்கடைக்காரர் அழகர்சாமி கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கோயில் திருவிழாக்கள் சரிவர நடைபெறாததால் பூக்களின் விலை குறைந்து வந்தது. இந்த ஆண்டு நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் கோயில் திருவிழாக்கள் களைகட்டி வருவதால் செண்டு மல்லி பூக்கள் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post சாணார்பட்டி பகுதியில் செண்டு மல்லி பூ விளைச்சல் சூப்பர்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: