சமத்துவபுரம் ரேஷன் கடையை சீரமைக்க கோரிக்கை

நித்திரவிளை, பிப்.16: நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை சீரமைக்க கோரி திமுக மாவட்ட பிரதிநிதி அப்துல்ரகுமான், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கலிங்கராஜபுரம் பகுதியில், 1999ம் ஆண்டு பெரியார் சமத்துவபுரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்த போது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு ரேஷன் கடையும் திறந்து வைத்தார். ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் இந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். சுமார் 25 வருடங்களாக எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்யாததால் ரேஷன் கடை தற்போது சுவர்கள் மற்றும் தரைப்பகுதி கீறல்கள் விழுந்தும், கூரை பகுதியில் புதர்கள் வளர்ந்தும், பொதுமக்களுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகவே மழைக்காலம் துவங்கும் முன்பு இந்த ரேஷன் கடை கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சமத்துவபுரம் ரேஷன் கடையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: