இலையூர் வாரியங்காவல் அரசு பள்ளியில் மரக்கன்று நடுவிழா

 

ஜெயங்கொண்டம், ஜூன் 21: ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியஙகாவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நட்டு வைத்து ஒவ்வொரு மாணவர்களும் செல்லும் இடங்கள் மற்றும் தங்களது வீட்டில் தோட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டுமென மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். பசுமை படைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு, விவசாய ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post இலையூர் வாரியங்காவல் அரசு பள்ளியில் மரக்கன்று நடுவிழா appeared first on Dinakaran.

Related Stories: