கோவை மாவட்டத்தில் 44 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

கோவை, மே 12: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று பிஆர்எஸ் மைதானத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், போலீஸ் துணை கமிஷனர் ரோகித் நாதன் ராஜ கோபால், போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமரன், ஆர்டிஓக்கள் சிவகுருநாதன், ஆனந்த், பாலமுருகன், சத்திய முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ேசாதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 1157 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 1113 பள்ளி வாகனங்கள் தகுதி பெற்றது. ஆய்வின் போது தகுதிபெறாத சுமார் 44 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று தற்காலிக ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் குறைபாடுகளை சரி செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே பொது சாலையில் இயக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பு துறையின் மூலமாக ஓட்டுநர்களுக்கு தீயை எவ்வாறு அணைப்பது மற்றும் தீ அணைப்பான் எவ்வாறு பயன்படுத்தப்படுவது என செயல்முறை வகுப்பு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மேலும் ஓட்டுநரின் உயரம், எடை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் என உடல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 887 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து துறையினர் கூறுகையில், ‘‘ வெப் கேமரா, அவசர கால வழி இன்றி சில வாகனங்கள் இருந்தது. பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. சிலர் வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வரவில்லை. முறையாக ஆய்வு நடத்திய பின்னரே அனுமதி பெற்று தான் வாகனங்களை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு முறை வராத வாகனங்கள் ஆய்வு நடத்தப்படும்’’ என்றனர்.

The post கோவை மாவட்டத்தில் 44 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.