கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மழைநீர் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்: அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்

பெங்களூரு: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். நரேகா திட்டத்தின்கீழ் 100 நாளில் மழைநீர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். மாநில பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்களில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஐந்து வருடத்தில் மாநிலத்தில் 14.58 கோடி வேலை நேரத்தின் கீழ் பணிகள் நடந்துள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நமது மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாகும். கர்நாடக மாநிலத்தில் நரேகா திட்டத்தின் கீழ் ரூ.3926.37 கோடி தொழிலாளர்களுக்கு கூலியாக கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 13 கோடி மனித வேலை நேரம்  வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு இதை 14.65 கோடி மனித வேலை நேரமாக உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது போல் கூலியும் ஏப்ரல் முதல் ரூ.289 என உயர்த்தப்படுகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.10 வழங்கப்படுகிறது. மார்ச் 15 ல் தொடங்கி மூன்று மாதம் உழைப்போம் வாருங்கள் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும். கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். நரேகா திட்டத்தின்கீழ் 100 நாளில் மழைநீர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். மார்ச் 22ம்தேதி மழை நீரை பிடிப்போம் (கேச் த ரைன்) என்ற திட்டத்தை அறிவித்தார்.அதன்படி தனியார் மற்றும் அரசு நிலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்….

The post கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மழைநீர் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்: அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: