கொரோனா தடுப்பு பணிக்காக திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சையில் உள்ளனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரை பிரபலங்களும் , தொழிலதிபர்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்இந்த நிலையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2வது அலையால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதே போன்று முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தமது நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ. 1 கோடிக்கணக்கான காசோலை வழங்கினர். …

The post கொரோனா தடுப்பு பணிக்காக திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: