ஆசிரியர் வீட்டில் இருந்து வீசிய 16.50 லட்சம் வழக்கில் அரசு வழக்கறிஞர், பல் மருத்துவர் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதாக அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும்படை அலுவலர் சாணக்கியன் தலைமையிலான குழுவினர் திரு.வி.க நகரில் உள்ள குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆசிரியர் குமார் வீட்டிலிருந்து  வீசப்பட்ட 16.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தர்மபுரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, பல் மருத்துவர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பசுபதி, பல் மருத்துவர் சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: