கொப்பரை தேங்காய் விலை உயர்த்த ஒன்றிய அரசுக்கு முன்மொழிவு

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொப்பரை தேங்காய் 105 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு 310 டன், 2020ல் 43 டன், 2021ல் 29 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ல் 1,232 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காய் விலை கண்டிப்பாக உயர்த்தப்படும். எங்கள் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். இவ்வாறு அவர் பேசினார்….

The post கொப்பரை தேங்காய் விலை உயர்த்த ஒன்றிய அரசுக்கு முன்மொழிவு appeared first on Dinakaran.

Related Stories: