இஸ்ரோ ஆய்வு குழு விளக்கம் ஜிசாட்-1 செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது ஏன்?

புதுடெல்லி: வால்வு கசிவால், திரவ ஹைட்ரஜன் டேங்கில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக ஜிசாட்-1 செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோவின் ஆய்வுக்குழு அறிக்கை தந்துள்ளது. நாட்டின் இயற்கை வளங்கள், எல்லை நிலப்பரப்புகள், வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்டறிய உதவும் வகையில், ஜிசாட்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 307வது நொடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்துவது தோல்வி அடைந்தது.இது தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘வால்வு கசிவால் திரவ ஹைட்ரஜன் டேங்கில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக ஜிசாட்-1 செயற்கைகோள் திட்டம் தோல்வி அடைந்தது.எனவே, எதிர்கால திட்டங்களில் வால்வுகள் மற்றும் அதன் தொடர்புடைய சீலிடப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த வேண்டும், கூடுதல் கிரையோஜெனிக் தானியங்கி கண்காணிப்பு மூலம் கசிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும்,’ என ஆய்வுக்கு குழு பரிந்துரைத்துள்ளது….

The post இஸ்ரோ ஆய்வு குழு விளக்கம் ஜிசாட்-1 செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: