160 கோடியில் கட்டிய 10 பாலங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை: கோவை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.160 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலம், 7 ஆற்று பாலங்களை  வீடிேயா கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூரில் ரூ.22 கோடியே 60 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்,  நந்திமங்கலம்  - பூலாமேடு கிராமங்களுக்கு இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருச்சி மாவட்டம்,  எம்.எஸ்.பி  கேம்ப் சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் மதுரை மற்றும் பேருந்து நிலைய கிளை பகுதிகள்,  தர்மபுரி மாவட்டம்,

குமாரசாமிபேட்டை கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், திருப்பூர் மாவட்டம், வாளவாடி - தெற்குபூதனம் சாலையில் பழையூரில் கட்டப்பட்டுள்ள  பாலம், ஈரோடு மாவட்டம், நாகர்பாளையம் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம்,  குமாரபுரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்,  பாளையங்கோட்டை - குறுக்குச்சாலை - குளத்தூர் - பந்தல்குடி - அருப்புக்கோட்டை சாலையில் கொ. தளவாய்புரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்,  திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.160 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலங்கள்  மற்றும் 7 ஆற்றுப்பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: