இந்திய கம்யூ. கொடியேற்று விழா

அறந்தாங்கி,டிச.18: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பரவாக்கோட்டைகொளத்துகுடியிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க கொடியேற்ற விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம், பரவாக்கோட்டை கொளத்துகுடியிருப்பில் கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செங்கோடன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய கம்யூ. கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: