இந்தியாவில் நுழைந்த குரங்கு அம்மை?… உத்தரப் பிரதேச சிறுமிக்கு உடல் முழுக்க கொப்புளங்கள்! மாதிரிகள் சேகரிப்பு

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. சின்னம்மை போல குரங்கு அம்மை வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக கோடை காலங்களில் பரவும் நோய் தொற்றாகும். ஆனால், தற்போது குரங்கு அம்மை முதல் முறையாக ஆப்ரிக்க நாடுகளைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்கு பரவத் தொடங்கி இருக்கிறது. இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமின்றி ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலும் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. உத்தரப் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி சரும அரிப்பு, கொப்புளங்கள், தோல் தடுப்பு ஆகிய அறிகுறிகளுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ள அதிகாரிகள், குழந்தையை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். சிறுமியோ அவரது உறவினர்களோ கடந்த 1 மாதத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாத நிலையில், குரங்கு அம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளதால் சிறுமி வசித்த பகுதியில் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.   …

The post இந்தியாவில் நுழைந்த குரங்கு அம்மை?… உத்தரப் பிரதேச சிறுமிக்கு உடல் முழுக்க கொப்புளங்கள்! மாதிரிகள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: