2வது நாளாக தங்கம் விலை உயர்வு

புதுடெல்லி: தலைநகரில் 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது.உலகளாவிலான மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டியது உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து 2வது நாளான நேற்றும் அதன் விலை உயர்ந்தது. டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை 10 அதிகரித்து, 10 கிராம் 31,580க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை எவ்விதமாற்றமின்றி 8 கிராம் 24,800க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளி உலோகத்தையும் தொழில் நிறுவனங்கள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் வாங்கி செல்ல முன்வந்தனர். இதனால் நேற்று அதன் விலை அதிரடியாக 690 அதிகரித்து, கிலோ 40,600க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரச்சந்தையிலும் இதன் விலை 60 உயர்ந்து, கிலோ 39,200க்கு விற்கப்பட்டது. நூறு எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் விலை எவ்வித மாற்றமின்றி, அதன் வாங்கும் விலை 75,000 ஆகவும், விற்கும் விலை 76,000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: