ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்திய தம்பதி உட்பட 4 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து 2 மோட்டார் பைக்குகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி. கணேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊத்துக்கோட்டை சப் – இன்ஸ்பெக்டர்கள் விக்னேஷ்வர், பூபாலன், சத்திய நாராயணன் மற்றும் ஏட்டுகள் ராமராஜ், சங்கர், பன்னீர் ஆகியோர் தமிழக – ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநில பகுதியில் இருந்து வந்த 2 மோட்டார் பைக்குகளை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிந்தது.

41 கிலோ குட்காவையும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலிசார், அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வேழவேந்தன்(55) அவரது மனைவி வெங்கடசுப்புலு(48) கொடுங்கையூரை சேர்ந்த பரமசிவம்(62) தண்டையார்பேட்டையை சேர்ந்த மேகலா(35) ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ1 லட்சம் என கூறப்படுகிறது. பின்னர் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனால் ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்திய தம்பதி உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: