அனுமதி பெறாமல் பாஜக கொடி கம்பம் வைத்ததாக புகார்: பாஜக நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

கோவை : கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சியில் அனுமதி பெறாமல் பாஜக கொடி கம்பம் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து இடிக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது அசோகபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள் இருக்கும் காந்தி காலனி பகுதியில் 600-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அண்மையில் பாஜக-வில் இணைந்த இந்த பகுதியை சேர்ந்த சிலர் கடந்த டிசம்பர் 24-ம் தேதி தங்களது கட்சியின் கொடி கம்பத்தை வைத்திருக்கிறார்கள். இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் பாஜக-வை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்து இருப்பதாகவும், அதையும் மீறி உரிய அனுமதியின்றி பாஜக கொடி கம்பம் நடப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டினர். இது தொடர்பாக ஊர் மக்கள் சார்பில் சுமார் 50 பேர் கையெழுத்திட்ட புகாரை வருவாய் ஆய்வாளர் மற்றும் பெரியநாயகன்பாளையம் காவல் ஆய்வாளரிடம் அளித்தனர். இதையடுத்து அனுமதி பெறாமல் கொடி கம்பம் வைத்த சின்ராசு, சேகர், கனகராஜ் ஆகிய 3 பேர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    …

The post அனுமதி பெறாமல் பாஜக கொடி கம்பம் வைத்ததாக புகார்: பாஜக நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் appeared first on Dinakaran.

Related Stories: