அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கடமலைபுத்தூர் முன்மாதிரி ஊராட்சியாக அறிவிப்பு

 

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைபுத்தூர் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கடமலைபுத்தூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் ஜல்ஜீவன் மிஷன் திட்டங்கள் மூலமாக சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாபு தீர்மானம் வாசித்தார்.

அதில் கடமலைப்புத்தூர் ஊராட்சியில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தில் ,தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் முன்மாதிரி ஊராட்சியாக இந்த கடமலைப்புத்தூர் ஊராட்சி அறிவிக்கப்பட்டது. மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக ஊராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கடமலைபுத்தூர் முன்மாதிரி ஊராட்சியாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: