16.4.2026 முதல் 22.4.2026 வரை
சாதகங்கள்: ஜாதகத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து ஒரே ராசியில் இருப்பது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது, துணிவு, முயற்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இரண்டாம் இடத்தில் சனி, புதன், செவ்வாய் இருப்பது கடின உழைப்பால் வருமானம் கிடைக்கும் எனக் காட்டுகிறது. ஐந்தாம் இடத்தில் குரு இருப்பது மிகச் சிறந்த அமைப்பாகும்; இது கல்வி, பிள்ளைப் பாக்கியம் மற்றும் பூர்வ புண்ணியத்தை அளிக்கும். திருமணமான பெண்களுக்கு கருதரிக்க கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.
கவனம் தேவை: சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து இது சிலருக்கு அற்புதம் செய்தாலும், சிலருக்கு கோபத்தையும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கும். இது `தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று வாதிடும் குணத்தையும், கலை ஆர்வத்தையும், சில நேரம் திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போவதையும் குறிக்கும் ராசியில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் சனி செவ்வாய் இணைந்து இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சகோதர உறவுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: அனுமான் வழிபாடு நல்ல பலனைத் தரும். வெள்ளிக்கிழமை கோபூஜை செய்யுங்கள்.
