மகரம்

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: ஏழில் சூரியன், குரு, புதன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆறில் செவ்வாய் இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கடன்களை அடைக்க வாய்ப்பு. உண்டு. வேலைத்திறன் பாராட்டப்படும். கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விடலாம். வரவேண்டிய கடனும் வசூலாகிவிடும். வாடகைக் கட்டிடத்தில் நடந்த தொழில் சொந்த கட்டடத்திற்கு மாறும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வையால் மனக்குழப்பங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். நிலம், வீடு தொடர்பான முயற்சிகள்
சாதகமாக அமையும். ஆன்மிக வழிபாட்டால் மனநிறைவு ஏற்படும்.

கவனம் தேவை: சனி வக்கிரம் இருப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். அதிக உழைப்பு காரணமாக சோர்வு ஏற்படலாம்.துணைவருடன் கருத்து வேறுபாடு வரலாம். பொறுமையுடன் பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். கூட்டாளிகளை முழுமையாக நம்புவதற்கு முன் ஆய்வு அவசியம்.பழைய பணிகளை கவனமாக முடிக்கவும். சட்டம் மற்றும் ஆவணங்களில் அலட்சியம் வேண்டாம். உடல் நலத்தில் மூட்டு வலியை கவனிக்கவும். பொறுமை அவசியம் உடன் பிறந்தவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு சிறப்பு தரும்.