16.4.2026 முதல் 22.4.2026 வரை
சாதகங்கள்: இது மிகவும் சிறந்த காலமாகும். லக்னாதிபதி சூரியன் உச்சத்தில் இருப்பதால் புகழ், செல்வாக்கு, முன்னேற்றம் கிடைக்கும். தொழில், வேலை போன்றவற்றில் நல்ல வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்காக எடுத்த முயற்சிகள் பலன் தரும். உங்கள் வேலை தொடர்பாக இருந்த தடைகள் விலகும். பதினொன்றாம் இடத்தில் குரு இருப்பதால், நல்ல லாபம் கிடைக்கும். தெய்வ தரிசனமும் பெரியவர்கள் ஆசிர்வாதமும் உண்டு. ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் புண்ணியம், வசதி மற்றும் ஆன்மிக ஈடுபாடு இருக்கும். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் ஸ்தானத்தையும் பார்ப்பதாலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.
கவனம்தேவை: எட்டாம் இடத்தில் பல கிரகங்கள் இருப்பதால் உடல்நலமும் மனநிலையும் பாதிக்கக்கூடும். பிரயாணங்களில் கவனம் தேவை. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை தவிர்க்கப்பட வேண்டும். ராசியில் கேது இருப்பதால் உள்ளார்ந்த குழப்பம் மற்றும் தனிமை உணர்வு இருக்கும். ஏழாம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புண்டு.
சந்திராஷ்டமம்: 17.4.2026 காலை 12.02 வரை சந்திராஷ்டமம் உண்டு.பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சூரிய வழிபாடு சிறந்த பலனை தரும். ஸ்ரீராமரை வணங்குங்கள். சிறப்பாக இருக்கும்.
