(1.8.2026 முதல் 7.8.2026 வரை)
சாதகங்கள்: லாபத்தில் சூரியன் புதன் குரு இணைவு அற்புதம் செய்யும். யோகங்களை ஏற்படுத்தும். மூத்தோர் ஆதரவு உண்டு.செவ்வாய் 10 ல் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம். பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வையால் குடும்ப அமைதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி வாய்ப்பு உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
கவனம் தேவை: குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க இயலாமல் போகலாம். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும். நண்பர்களுடன் பணப் பரிவர்த்தனையில் மிகுந்த கவனம் தேவை. முதலீடுகளில் அவசரம் வேண்டாம். சிறு கருத்து வேறுபாடுகள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அதிக வேலை காரணமாக ஓய்வு குறையலாம். சிறிய உடல் நலக் குறைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள் ஏழில் சனி இருந்து ராசியைப் பார்ப்பதால், சிந்தனையில் தடங்கல் ஏற்படும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
சந்திராஷ்டமம் : 4.8.2026 இரவு 9.55 முதல் 7.8.2026 காலை 1.53 வரை சந்திராஷ்டமம் உண்டு.
பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.
