தனுசு

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: 5க்குரிய செவ்வாய் 7ல் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன் சுமை குறைய வாய்ப்பு உண்டு. மறைமுக வருமானம் கிடைக்கலாம். ஆராய்ச்சி, காப்பீடு, வரித்துறை சார்ந்த பணிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார கூட்டாளிகளால் நன்மை உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான முயற்சிகள் பலன் தரும். 7ல் உள்ள செவ்வாயும், மூன்றில் உள்ள ராகுவும், உங்களுக்கு நடைபெறும் எதிர்மறை பாதிப்புகளைக் குறைத்து, பாக்கியம் அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றி பெறும்.

கவனம் தேவை: ராசிநாதன் எட்டில் மறைந்து இருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுமையற்ற பேச்சைத் தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற மனக்கவலை ஏற்படலாம்.அஷ்டமத்தில் ராசிநாதனோடு சூரியன், புதன் இணைவதால் முதலீடுகளில் நிதானம் அவசியம். சனி தற்சமயம் வக்ரத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடிகள் வரலாம்.

பரிகாரம்: குருபகவான் வழிபாடு செய்யுங்கள்.