விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவுக்கு வரிச்சலுகை அளிக்கும் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் போராட்டம்

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் எஃப் ஏ டி என்ற குறிப்பாக இந்திய நாட்டின் விவசாய உணவு உற்பத்தி பொருட்களை தடை செய்வதற்கு ஒன்றிய மோடி அரசாங்கம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு ரூபாய் கூட வரி இல்லாமல் இந்தியாவிற்கு தங்கு தடை இன்றி அரிசி கோதுமை மக்காச்சோளம் பால் போன்ற பொருள்களை இறக்குமதி செய்து இந்திய நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கிற இந்த ஒப்பந்தத்தை இந்திய பாராளுமன்றத்தில் 24.7.2026 அன்று நிறைவேற்றக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் காலையில் அரண்மனை சிறுவயலில் 8 மணி அளவில் நடைபெற்றது. ஒன்பது மணி அளவில் கல்லலில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் பி எல் சக்திவேல் இந்த போராட்டத்தில் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் அ.ஆறுமுகம் காதர் உசேன், பொன்ராஜ் ,பழனி குமார், ராஜேந்திரன், அரண்மனை சிறுவயல் விவசாயிகள் கல்லல் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: