ராயக்கோட்டையில் மகசூல் குறைவு பன்னீர் ரோஜாக்களை கவாத்து செய்து பராமரிப்பு

*மீண்டும் துளிர்விட்ட செடிகள்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் குறைவான அளவில் விளைச்சல் தந்த பன்னீர் ரோஜா செடிகளில் காத்தப்பு முறையில் பராமரிப்பு மேற்கொண்டதில், இளஞ்சிவப்பு நிறத்தில் துளிர் விட துவங்கி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் ஓசூர் எல்ைல பகுதி வரை கால நிலை மாற்றம், ஒரே சீரான நிலையில் இருந்து வருகிறது. இங்கு. மண்ணின் தன்மை அதிக ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மற்ற பயிர்களை விட பூக்கள் சாகுபடிக்கு விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

இதன் காரணமாக அதிக பூந்தோட்டங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். செண்டுமல்லி, சாமந்தி மற்றும் பட்டன்ரோஸ், பன்னீர் ரோஜா என பல்வேறு மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் பரவாக பன்னீர் ரோஜா சாகுபடி செய்துள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மகசூல் எடுத்து வந்தனர்.

செடிகள் உயரமாக வளர்ந்து குறைந்த அளவிலேயே பூக்கள் கொடுத்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர். இதனைத்தொடர்ந்த செடிகளை கவாத்து(வெட்டி விடுதல்) செய்துள்ளனர். அவ்வாறு செய்த செடிகள், தற்போது, இளஞ்சிகப்பு நிறத்தில் துளிர்விட்டு முளைக்க ஆரம்பித்துள்ளது. செடிகள் நன்றாக வளர்ந்து மீண்டும் 3 ஆண்டுகள் பூக்களை விட்டு பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது ராயக்கோட்டை பகுதியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மண்ணில் உள்ள ஈரப்பதம், அதிகம் காணப்படுகிறது. வழக்கமாக சோளம், நெல், ராகி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்த நிலையில், தற்போது விவசாயிகள் அதிகம் மலர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் பூக்கள் தேவை அதிகம். இதனாலேயே நாங்கள் அதிக மலர்களை சாகுபடி செய்து வருகிறோம். தற்போது, பன்னீர் ரோஜாக்கள் தான் அதிகம் விளைச்சல் ஆகி வருகிறது.

இதில் ஒரு சில செடிகள் உயரமாக வளர்ந்து, குறைந்த அளவில் பூக்களை கொடுத்துள்ளது. இதனால், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க செடிகளில் கவாத்து(வெட்டுதல்) முறையில், செடிகளை வெட்டி வருகிறோம். தற்பேது வெட்டிய செடிகளில் மீண்டும் இலைகள் முளைத்து பூக்கள் பூக்கும். இதன் மூலம் 3 ஆண்டுகள் நல்ல விளைச்சளை காணமுடியும் என்றனர்.

Related Stories: