உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு: திமுக மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர்

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். இதேபோல திமுக மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொண்ட “தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற உறுப்பினர் நலச் சங்க”த்தின் மாநில நிர்வாகிகளான கோவை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான சா.குமார ராஜபாண்டியன், சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான பி.ஜான்சி உமா, கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ஆர்.எம்.சாகுல், செங்கல்பட்டு நியமன உறுப்பினரான எம்.சிவலிங்கம், காட்பாடி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ரங்கசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற நியமன உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அத்துடன், திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில செயலாளர் டி.எம்.என்.தீபக், மாநில தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் சந்தித்தனர். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: