அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

சென்னை: அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மாணவ சேர்க்கையில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், இந்த கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் வகுப்புகள் தொடங்குகிறது. உயர் கல்விக்குள் கால் எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகளை வரவேற்பதற்கு அனைத்து கல்லூரிகளும் தயார் நிலையில் உள்ளது.

மாணவர்களுக்காக கலந்துரையாடல் மற்றும் அறிமுக பயிற்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறை தலைவர் பவானீஸ்வரி சிறப்பு விருந்தினராகவும், சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் முன்னாள் தலைமை செயலர் இறையன்புவும் கலந்துகொள்ள உள்ளனர்.

Related Stories: