திருச்சியில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கல்மந்தை காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(22). லோடுமேனான இவர், அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் இறந்து கிடப்பதாக நேற்று காலை காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சென்று பார்த்த போது அங்கு சடலம் அருகில் போதை ஊசி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு நேரத்தில் ராஜமாணிக்கம் போதை ஊசி செலுத்தியிருந்ததும், இதனால் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. கடந்த மாதம் 7ம் தேதி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தன்னுடைய காதலனுடன் திருச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி போதை ஊசி செலுத்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: