அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: அதிமுக எம்எல்ஏ எம்ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவை தொடர்ந்து கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கரூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. அதன்படி, கரூர் தொகுதி தற்போது அதிகாரப்பூர்வமாக காலியான தொகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் திருச்சி கிழக்கு, தாராபுரம், அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கரூர் தொகுதியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: