சென்னை: அரசுப் பள்ளி வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ் சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீதி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்னாமலை நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்வர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.
ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளை தொந்தரவு செய்வதை, முதல்வர் விஜய்யே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதல்வரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
