யார் நண்பர், யார் சந்தர்ப்பவாதி என அடையாளம் காட்டிய தேர்தல்: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி:
யார் நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்தது. மிக விரைவில் மாற்றம் வரும். நாங்கள் யார் என்பதை காட்டுவோம். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது போல், எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றுவிட்டு தவெகவில் இணைபவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இணைய வேண்டும். இந்த தேர்தலே வித்தியாசமான தேர்தல்.

தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற்றுவிட்டனர். எனவே கூட்டணியில் இருந்து வெளியேறிதான் ஆக வேண்டும். முஸ்லீம் லீக் முடிவையே மதிமுக எடுக்கும். அதிமுக தீண்டத்தகாத சக்தியை போல், அக்கட்சியுடன் கூட்டணியே வைக்காத கட்சி போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன உலக மகா தவறா?. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டாக உடைந்தது. இப்போது இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு செல்லவில்லையா?. திமுகவை விட்டு அதிமுக பிரிந்து சென்று ஏறத்தாழ 54 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று கூறவில்லை. ஆனால், அதிமுகவும், திமுகவும் சேர்ந்து கூட்டணி வைத்தால் அதில் ஒன்றும் தவறுமில்லை. அப்படி கூறினால் உலக மகா தவறா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: