தவெக அரசுக்கு ‘மண்டையில் குட்டு’.! நான் முதல்வன் திட்டத்தின் பெயர மாத்தலாம், மக்கள் மனசுல இருந்து Delete செய்யவே முடியாது…

சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர் தப்பிய ஜெனிபர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று துணை ஆட்சியராக (Deputy Collector) பொறுப்பேற்க உள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சென்னையில் பெற்ற இலவச பயிற்சியே, தனது இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக குறிப்பிட்டார். இந்த நிலையில் இவர் பேசிய காணொளியை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நீங்கள் நான் முதல்வன் திட்டத்தின் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.

ஆனால் இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன என்று தவெக அரசின் மண்டையில் நங்கென்று குட்டு வைத்துள்ளார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்றும் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Related Stories: