சேலத்தில் மாணவி தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது; மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எப்படியும் டாக்டராகி விடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் பேப்பர் லீக், ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வு அறை உடல் பரிசோதனை என மாபெரும் உயிர்கொல்லும் மோசடி ஆகியிருக்கிறது. மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும்-சட்ட போராட்டத்தையும் தவெக அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும். இந்த நேரத்தில், நீட் தேர்வுக்கு தயாராகும் தம்பி-தங்கைகள், மன உளைச்சலுக்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: