டூவீலர் மீது கார் மோதல்: 3 பேர் பலி

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புளியம்பட்டியைச் சேர்ந்தவர் லாடசாமி (60). இவர், டூவீலரில் உறவினர் 2 பேருடன் திருப்புல்லாணியில் இருந்து ஏர்வாடிக்கு நேற்று பிற்பகல் சென்றார். ஏர்வாடி மெயின் ரோடு கொம்பூதி ரோடு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது, ஏர்வாடி தர்காவில் இருந்து கீழக்கரை சென்ற கர்நாடகா பதிவெண் கொண்ட கார், லாடசாமியின் டூவீலர் மீது மோதியது. இதில் லாடசாமி, தேவிபட்டினத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (25), புல்லாணி (30) ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து ஏர்வாடி தர்கா போலீசார் வழக்கு பதிந்து கர்நாடகா காரை ஓட்டி வந்த குண்டல்பேட்டையைச் சேர்ந்த மன்சூர் அலியிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: