ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்றதாக வெளியான செய்திக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு!

டெல்லி: ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்றதாக வெளியான செய்திக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதாக செய்தி வெளியானது.மே 22ம் தேதியுடன் முடிவடைந்த 2 வார காலத்தில் ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றதாக செய்தி வெளியாகி இருந்தது. 2026 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் 880.52 மெட்ரிக் டன் தங்கம் உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: