ரூ.800 கோடி மோசடி வழக்கில் 2 பேர் கைது

புதுடெல்லி: உத்தரகாண்டில் லோனி நகர்ப்புற மாநில கடன் மற்றும் சேமிப்பு கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதாக உறுதியளித்து அவர்களிடம் ரூ.800கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் என்று கருதப்படும் கிஷன் ஜெயின் மற்றும் பங்கஜ் ஜெயின் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐயிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் மும்பையில் பதுங்கியிருந்த கிஷன் மற்றும் பங்கஜ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related Stories: