×

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என கூறும் முதல்வர் விஜய்யின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் மாடுகளை அறுப்பது தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் பண்டிக்கைக்கு முந்தைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பு பல இஸ்லாமியர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தையும், சமுதாயத்தில் குழப்பம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.

இந்த வழக்கின் போது ஆளும் அரசு தனது தரப்பு வாதத்தை பெயரளவிற்குக்கூட வைத்ததாக தெரியவில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீதி பரிபாலன முறையில் ஒரு வாதியாக உள்ள அரசு தனது கடமையை செய்ய தவறி விட்டதைத்தான் இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதை தமிழக முஸ்லிம்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tags : Vijay ,Tamil ,Nadu ,Dawheed Jamaat ,Chennai ,Tamil Nadu ,Tawheed ,Jamaat ,General ,Mujipur Rahman ,Chennai High Court ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...