- அமைச்சர்
- ஆதவ் அர்ஜுனா
- கோவா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொதுப்பணித்துறை அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- பரியார்
- இளுலகம்
- கோவா காந்திபுரா
- திமுகா
கோவை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குள்ளாகி உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் திமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கோவையில் தொழில்துறை, பொருளாதார துறை விவசாயத்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நெடுஞ்சாலை சரியாக இல்லை என்றால் தொழில்துறை சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் இடையே போதை பழக்கம் உருவாகி இருக்கிறது. இதனால் தான் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. அனைத்து மைதானங்களையும் சீர் செய்ய உத்தரவிடப்பட்டது. இளைஞர்கள் விளையாட முடியாமல் உள்ளனர். அதனால் தான் அவர்கள் பாதை மாறி போதை பழக்கத்தை நோக்கி செல்கின்றனர்.
சென்னை நேரு ஸ்டேடியம் உலக தரத்தில் உள்ளது போன்று கோவை, நெல்லை, திருச்சி, நாகப்பட்டணம் போன்ற பகுதியில் உலக தர ஸ்போர்ட்ஸ் சென்டர் உருவாக்கப்படும். இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் தமிழகத்தில் தான் நடக்கிறது. அதில் அதிர்ச்சியாக உள்ள விஷயம் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 18,000 பேர் விபத்தில் இறந்துள்ளது தான். கோவையில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் அதிக விபத்து நடந்திருக்கிறது.
ஜிடி நாயுடு பாலம் முடியும் இடத்தில் 5 கி.மீ புதிய மேம்பாலம் கட்ட ஆய்வு செய்தோம். நெடுஞ்சாலைகளில் விபத்துக்கான மருத்துவமனைகளை கட்ட வேண்டும். கடந்த கால டெண்டர்களை ஆய்வு செய்து வருகிறோம். கடந்த ஆண்டு வெளியான டெண்டர்களை நிறுத்தி விட்டோம். பாலங்களில் தவறு நடப்பதை தடுக்க 3 நபர் குழு மூலமாக ஆய்வு செய்யப்படும். அரசு துறை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். பெரியார் அறிவுலகம் நல்ல புராஜக்ட் தான். சில குறைகள் கட்டுமானத்தில் உள்ளது அவை சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
