- ஜோலி ரீல்ஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- சோசவந்தன் எம். எல்.
- அட்ராக்ஸிட்டி
- மதுரை மாவட்டம்
- சோழவந்தன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம்
- Wadipatti
- தமேகா
வாடிப்பட்டி: சோழவந்தான் எம்எல்ஏ அலுவலக இருக்கையில் அமர்ந்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் வாடிப்பட்டியில் அமைந்துள்ளது. தற்போது இந்த தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா, கிழக்கு சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயனுடன் இணைந்து நேற்று தனது எம்எல்ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தவெக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா வரும் முன்பே, எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து விட்டதாக கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம் திறப்பு விழாவிற்கு வந்திருந்த தவெக நிர்வாகிகள் சிலர், அலுவலகத்தில் இருந்த எம்எல்ஏவின் இருக்கையில் மாறி, மாறி அமர்ந்து ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். 2 எம்எல்ஏக்கள் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா வந்த பின்பு மீண்டும் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
