மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சூலப்புரத்தை சேர்ந்த பொன்னையா என்பவரது தோட்டத்தில் நேற்று பருத்தி எடுக்கும் வேலை நடைபெற்றது. இந்த பணிகளில் இதே ஊரை சேர்ந்த ராமுத்தாய்(58), தனிக்கொடி(52), கணபதியம்மாள்(60), வாசி அம்மாள்(56) உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதனால் பருத்தி எடுக்கும் பணிகளை நிறுத்திவிட்டு, அனைவரும் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கினர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியம்மாள் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். வாசி அம்மாள் பலத்த காயமடைந்தார்.

Related Stories: