தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுரை

 

சென்னைதமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு சட்டம் 45/1994க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் நோக்கில், உரிய சட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி, சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: