சென்னை: ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள படி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கனவான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.
1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.8.2010க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (டெட் தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
