திருச்சி. மே 18:திருச்சியில் டூவீலரை திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42). அப்பகுதியில் டெலிவரி செய்யும் கடை நடத்தி வருகிறார். சபிக்ராஜா என்பவர் தனது டூவீலரை பார்சல் செய்து அனுப்புமாறு கொடுத்து உள்ளார். பின்னர் பாலமுருகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
மே11ம் தேதி காலை பாலமுருகன் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு டூவீலர் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடியது கடையில் வேலை பார்க்கும் ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார்(27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.
