திருச்சி, மே 22: சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணை ப்பாளர் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் செயல் விளக்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற இன்று (22ம்தேதி) நடைபெற இருந்த புறக்கடை கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் நிலையப்பயிற்சி நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு 0431-2962854, 99424 49786, 88381 26730, 97156 26796 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் புனிதவதி தெரிவித்தார்.
