கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

 

திருச்சி, மே 22: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் ராம் நகர் 4வது கிராஸை சேர்ந்தவர் தங்கப்பாண்டி( 25). இவர் கண்டோன்மென்ட் பகுதியில் ஒரு சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மே.20ம் தேதி கருமண்டபம் சமத்துவ நகரைச் சேர்ந்த ரவுடி ஹேமஸ்வரன் (23) அங்கு வந்து, தங்கபாண்டியிடம் மதுஅருந்த கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குபதிந்து ரவுடி ஹேமஸ்வரனை கைது செய்தனர்.

Related Stories: