ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு

 

திருச்சி, மே.23: திருச்சி துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி (46). புற்றுநோயாளியான இவர் சிகிச்சைக்காக மே.13ம் தேதி காலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மருந்து மாத்திரைகளை பெற்றுக் கொண்டு பஸ்சில் சத்திரம் பேருந்து நிலையம் சென்றார். அங்கிருந்து துவாக்குடி செல்வதற்காக தனியார் பஸ்சில் பயணம் செய்தாா். அப்போது பழைய பால் பண்ணை அருகே வந்தபோது, ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயின் மாயமானது. இதுகுறித்து ஆனந்தி அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான 3 பவுன் தங்கச் செயினை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: