திருச்சி, மே 15: திருச்சியில் ஆட்டோ திருடிய மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மலைக்கோட்டை அரசமர சந்தை சேர்ந்தவர் சத்யகுமார்(31), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 6ம்தேதி தன் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தினார். மறுநாள் வந்து பார்த்தபோது, ஆட்டோ காணவில்லை. மேலும் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குபதிந்து ஆட்டோ திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
