இந்திய பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நாடு ஒரு மிகப்பெரிய பொருளாதார பேரிடரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் மோடி அண்மைக்கால அறிவிப்புகள் மிகத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன. மக்களை தங்கம் வாங்காதீர்கள், சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்துங்கள், பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள் என பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், தேசத்தின் பொருளாதார அடித்தளம் எந்த அளவுக்கு தள்ளாடி கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. நடுவண் அரசு நாட்டின் பொருளாதார நிலை குறித்து உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: