சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு லாக்டவுன்\போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசும் ஒன்றிய அரசும் உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சுமையை நிரந்தரமாக குறைக்கும் வகையில் அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
