விடிய விடிய மது விருந்து கார் மரத்தில் மோதி ரவுடி, நண்பர் பலி

வல்லம்: தஞ்சை அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தளபதி(36). ரவுடி. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று முன்தினம் அவருக்கு பிறந்த நாள் என்பதால், நண்பர்கள் அம்மன்பேட்டையை சேர்ந்த தமிழரசன்(27), நிதீஷ்(25), சுதர்சன்(21), நரேன்(18), அபினேஷ் (21) ஆகியோருடன் காரில் திருவையாறு சென்றார்.

இரவு 6 பேரும் மது அருந்தி விடிய விடிய கொண்டாடினர். நேற்று அதிகாலை காரில் புறப்பட்டனர். காரை தமிழரசன் ஓட்டி வந்தார். கண்டியூர் அருகே கார் சாலையோர பனை மரத்தில் மோதியதில் தளபதி, தமிழரசன் ஆகியோர் இறந்தனர்.மற்ற 4 பேரும் காயமடைந்தனர்.

Related Stories: